ஜூலியின் கதறலுக்கு என்ன காரணம்? நிச்சயம் இதுதான்!

  • IndiaGlitz, [Thursday,July 20 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோ வீடியோவில் உலகமகா நடிப்பு திலகம் ஜூலி வயிற்று வலியால் கதறுவதும், காயத்ரி, நமீதா தவிர பிற பங்கேற்பாளர்கள் பதறுவதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த வாரம் முழுவதுமே பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் குடும்பத்தின் அங்கத்தினர்களாகவும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டாஸ்க்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. நேற்றைய டாஸ்க்கில் சக்தி வாசு வைரத்தை திருடும் டாஸ்க்கை செவ்வனே செய்தார்
இதைப்போல இன்றைய டாஸ்க், ஜூலி வயிற்று வலியால் துடிப்பது போல நடிக்க வேண்டும் என்று இருக்க வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது. அல்லது பார்வையாளர்களின் கவனம் முழுவதும் தன்மீதே இருக்க வேண்டும் என்று முதல் நாள் முதலே ஓவர் ஆக்டிங் செய்து வரும் ஜூலியின் இன்னொரு நடிப்பாக இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் இன்னும் சிலமணி நேரங்களில் உண்மை என்னவென்று தெரிந்துவிடும். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்