கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் அடித்து கொலை: ஒரு அதிர்ச்சி சம்பவம்
- IndiaGlitz, [Tuesday,March 31 2020]
கொரோனா வைரஸ் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது இருப்பினும் பலர் இதனை செய்ய மறுத்து வருவதால் கொரோனா வைரஸ் தாக்கம் பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள ரன்னிசைத்பூர் பகுதியில் உள்ள மாதெளல் என்ற கிராமத்தை சேர்ந்த பாப்லு என்ற சமூக சேவகர் தனது கிராமத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே அவர் இவ்வாறு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவரால் அந்த கிராமத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்தும் வெளியூரிலிருந்து வந்தவர்கள் சுகாதாரத்துறையினர்களால் விசாரணை செய்யப்பட்டதோடு ஒருசிலர் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஒருசிலர் பாப்லூவை அடித்துக் கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெளியூரிலிருந்து இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வருபவர்களால் தன்னுடைய கிராமத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்ற சமூக நோக்கத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய பாப்லூவை அவரது சொந்த ஊர்க்காரர்களே அடித்துக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாப்லூவை கொலை செய்ததாக இதுவரை ஏழு பேர்களை கைது செய்துள்ளனர்.