உபி-யில்  நடக்கும் அவலம்....கங்கையில் மிதக்கும் உடல்கள்...!

  • IndiaGlitz, [Thursday,May 13 2021]

உத்திரப்பிரதேசத்தில் கங்கை நதியில் விடப்பட்ட உடல்கள், பீகார் மாநிலம் வரை வந்தது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் விடப்பட்ட உடல்கள், பீகார் மாநிலம், பக்சார் மாவட்டம், சவுசா என்ற கிராமப்பகுதியில் உள்ள கங்கை வர வந்துள்ளன. இதுவரை 71 உடல்கள் மிதந்து வந்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் அங்கு வலையை விரித்து உடல்களை கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து பாட்னாவில் உள்ள உயர்நீதிமன்றம், பீகார் அரசிற்கு இன்றைக்குள் பிராமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி பீகார் உயர்அதிகாரி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

உத்திரப்பிரதேச-பீகார் எல்லையில் ராணிகட்டில் நதி உள்ளது. அங்கு பெரிய வலையை வீசி உபி-யில் இருந்து மிதந்து வரும் உடல்களை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டோம். அப்படி எடுக்கப்பட்டவர்களின்
உடல்களை உபி மாநில அரசு தான் மீட்டு கொண்டுசெல்ல வேண்டும். இதுகுறித்து உபி அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.


உபி-பீகார் மாவட்ட நிர்வாகத்திடம் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். அங்கு பாதுகாப்பு முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், மக்கள் இறந்தவர்களின் உடலை நதியில் வீச முடியாது. இதுகுறித்து தக்க நடவடிக்கைகளை உபி அரசுதான் கட்டாயமாக எடுக்கவேண்டும் என அவர் கூறினார்.

அண்மையில் சம்பவம் குறித்து பீகார் அமைச்சர் சஞ்சய் ஜா டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

மீட்கப்பட்ட 71 உடல்களுக்கும் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது. இதுகுறித்து உபி அரசு விழிப்புடன் நடந்து கொள்வது அவசியமாகும். இருப்பினும் ராணிகட் கங்கை நதியில் வலை விரிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களுக்கும், புனித கங்கைக்கும் மக்கள் மரியாதை தரும் அளவிற்கு நடந்து கொள்ளவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பக்சார் மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ஜிதேந்திர நாத் கூறியிருப்பதாவது,
சவுசா கிராமம் போன்ற எல்லை கிராமங்களில் இருந்து மிதந்து வரும் உடல்கள் அழுகிய நிலையில் உள்ளது. இவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தார்களா..? என்பது கூட தெரியவில்லை. மருத்துவ அறிக்கை வரும்வரை காத்திருக்கிறோம். இதனால் மதச்சார்பான விஷயங்களுக்கோ, குளிக்கவோ அப்பகுதி மக்கள் கங்கை நீரைப்பயன்படுத்த வேண்டாம், இது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

More News

மனைவி மகளுடன் துல்கர் சல்மான் புகைப்படம்: 3 மணி நேரத்தில் 15 லட்சம் லைக்ஸ்கள்

தமிழ், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் மனைவி மற்றும்  மகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது 

கமல், சூர்யா பட வில்லன் நடிகருக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கமலஹாசன், சூர்யா, தனுஷ் உள்பட பல பிரபலங்கள் நடித்த படங்களில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

2-18 வயது உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி? எப்போது கிடைக்கும்?

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கோவேக்சின், கோவிஷுல்டு எனும் இரு கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் 6-8 வாரங்களுக்கு பொதுமுடக்கம்? ஐசிஎம்ஆர் சொல்ல வருவது என்ன?

இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவா இந்தியாவில் பொதுமுடக்கம் குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு தான் முக்கியம்...! அமைச்சர் அதிரடி உத்தரவு...!

பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின்  பாதுகாப்பு குறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் முக்கிய  முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.