ஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த சம்பவம்… 5 மாதங்களில் வெளியான பரபரப்பு தீர்ப்பு!!!

  • IndiaGlitz, [Thursday,October 29 2020]

 

ஒரு கொலையை மறைக்க 9 கொலையைச் செய்த ஒருவருக்கு தெலுங்கானா உயர்நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்து இருக்கிறது. இந்த கொலைகளைச் செய்தவர் ஒரு வெளிமாநிலத் தொழிலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார். இவர் தெலுங்கானா மாநிலத்தில் தங்கி அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அதேபோல மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மசூர் என்பவரின் குடும்பமும் அங்கு தங்கி வேலைப் பார்த்து வருகின்றனர். அந்தக் குடும்பத்தில் உள்ள ராபிகா எனும் பெண்ணுடன் சஞ்சய் கள்ளத்தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு விட்டுவிடாமல் ராபிகாவின் பெண்ணை அடைய வேண்டும் என்பதற்காக சஞ்சய் மேலும் ஒரு சதித்திட்டத்தை தீட்டியிருக்கிறார்.

இதற்காக ராபிகாவிடம் அன்பாகப் பேசி உன்னை என்னுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறேன் எனக் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட ராபிகா தன்னுடைய பெண்ணையும் உடன் அழைத்துக் கொண்டு சஞ்சய் குமாருடன் ரயில் பயணம் செய்திருக்கிறார். அப்போது ராபிகாவிற்கு உணவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவரை ரயில் இருந்து தள்ளிவிட்டு இருக்கிறார். பின்பு எதுவும் தெரியாதது போல மீண்டும் பணிசெய்யும் இடத்திற்கு வந்திருக்கிறார் சஞ்சய்.

இதைப் பார்த்த மசூரின் மனைவி நிஷா ராபிகா எங்கே என சஞ்சயிடம் கேட்டு இருக்கிறார். நடந்ததை மறைக்க வேண்டும் என்பதற்காக சஞ்சய் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியதை அடுத்து போலீசில் தகவல் கொடுக்க உள்ளதாக மசூரின் குடும்பத்தினர் மிரட்டி இருக்கின்றனர். ஒருவேளை இவர்கள் போலீசுக்கு சென்றுவிட்டால் எல்லா உண்மைகளும் தெரிந்து விடும் என்பதற்காக மசூர் அவரது மனைவி நிஷா அவரது குழந்தைகள் என அந்த குடும்பதைச் சேர்ந்த 9 பேரையும் உணவில் மயக்க மருந்தைக் கலந்து கொலை செய்து இருக்கிறார்.

பின்னர் அனைவரையும் சாக்குப் பையில் கட்டி கிணற்றிலும் வீசியிருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சஞ்சய் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம் சஞ்சய் குமாருக்கு மரணத் தண்டனை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது.

More News

'லவ் பண்ண எனக்கும்தான் ஆசை இருக்கு': வாயைவிட்டு சொல்லிவிட்ட ஷிவானி!

ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் குறைந்தது ஒரு காதல் ஜோடியாக இருக்கும் என்ற நிலையில் இந்த சீசன் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும் இன்னும்

சினிமாவையே மிஞ்சிய சம்பவம்… ஏமாற்றிய காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண்!!!

திரிபுரா மாநிலத்தில் தன்னை ஏமாற்றிய காதலன் மீது இளம்பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐசியூவில் சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை… பகீர் சம்பவம்!!!

ஹரியாணா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காசநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த 21 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று இருக்கிறது

மஞ்சள் நிறத்தில் ஆமை? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

மஞ்சள் நிறத்தில் உள்ள அரிய வகை ஆமையின் புகைப்படம் ஒன்றை வனத்துறை அதிகாரியான தேபாஷிஷ் சர்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்

மாஸ்டர் நாயகி மாளவிகாவுக்கு என்ன ஆச்சு? நெட்டிசன்களிடையே பரபரப்பு

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் நாயகியான மாளவிகா மோகனன் அடுத்ததாக பாலிவுட்டில் ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும்