புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவசமாக காண்டம் கொடுத்த அரசு: ஏன் தெரியுமா?
- IndiaGlitz, [Tuesday,June 02 2020]
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி, தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து வீடு திரும்பும்போது அவர்களுக்கு அரசே இலவசமாக காண்டம்கள் கொடுத்து அனுப்பிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலமான பிகாருக்கு கடந்த சில நாட்களாக திரும்பி வருகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 28 முதல் 29 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் வேறு மாநிலங்களில் இருந்து பீகாருக்கு வந்த தொழிலாளர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே அவரவர் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு தனிமைப்படுத்துதல் காலமான 14 நாட்கள் முடிந்த சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் தங்களுடைய வீட்டுக்கு செல்லும்போது அவர்களுக்கு இலவசமாக காண்டங்களை பீகார் அரசு வழங்கியுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு சென்றவுடன் தேவையில்லாத கர்ப்பத்தை தடுக்கவே இந்த காண்டம்கள் வழங்கப்பட்டதாக பீகார் அரசு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பீகார் அரசின் இந்த நடைமுறையை அனைத்து மாநில அரசும் பின்பற்றலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.