பீகார் சட்டமன்றத் தேர்தல்… ஆட்சி கட்டிலில் ஏறப்போவது யார்???
Send us your feedback to audioarticles@vaarta.com
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. அத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் நிதிஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி 128 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறது.
இத்தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றம் காங்கிரஸ் கூட்டணி 101 இடங்களைப் பெற்று இருக்கிறது. இதனால் பாஜக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியுடன் லாலுபிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணி கடுமையாகப் போராடியது.
இதைத்தவிர அம்மாநிலத்தில் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி தலைமையில் மற்றொரு அணியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும் போட்டியிட்டன. இத்தனை கட்சிகள் ஒரே தேர்தல் களத்தில் இருப்பதால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே நிலவரங்கள் தொடர்ந்து மாறிக் கொண்டே வந்தது. அதில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியும் காங்கிரஸ் மெகா கூட்டணியும் மாறி மாறி சில சுற்றுகளில் முன்னிலை பெற்று வந்தன. இதனால் எந்தக்கட்சி வெற்றி பெறும் என்று கணிக்க முடியாத சூழல் நிலவியது.
ஆனால் தற்போதைய சூழலில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி 128 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது. எதிரணியாக இருக்கும் காங்கிரஸின் மெகா கூட்டணி 101 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்கிறது. அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் இருந்தால் போதும் என்ற நிலையில் பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி 128 இடங்களைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. முன்னிலையில் பெற்றிருக்கும் பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் தங்களது வெற்றியை கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments