'பிகில்' படத்தின் 'வெறித்தனம்' பாடல் லீக் ஆகிவிட்டதா?

  • IndiaGlitz, [Friday,August 23 2019]

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் 'சிங்கப்பெணே பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலான 'வெறித்தனம்' என்ற பாடல் விரைவில் வெளிவரவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 'வெறித்தனம்' பாடல் திடீரென இணையத்தில் லீக் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பான செய்திகள் வெளிவந்துள்ளது. 'வெறித்தனம்' பாடல் விஜய் பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சிங்கப்பெண்ணே பாடலும் லீக் ஆனதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த பாடலும் லீக் ஆகியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

ஆனால் 'வெறித்தனம்' பாடல் லீக் ஆகவில்லை என்றும், இந்த பாடல் விரைவில் வெளியாக ரசிகர்கள் செய்த தந்திரமாக இந்த லீக் மேட்டர் இருக்கலாம் என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் 'வெறித்தனம்' பாடல் அதிகாரபூர்வமாக ரிலீஸ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

More News

ரூ.500 கோடி 'இராமாயணம்' படத்தில் ஹிருத்திக்-தீபிகா?

இந்திய இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் கதை எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும் இந்த கதை எத்தனை முறை படமாக்கப்பட்டாலும்,

பற்றி எரியும் அமேசான் காடுகளுக்காக குரல் கொடுத்த கோலிவுட் நட்சத்திரம்!

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகள் கடந்த சில நாட்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. இந்த தீயை அணைக்க அந்நாட்டு தீயணணப்பு துறையினர் போராடி வருகின்றனர்

கவின் - லாஸ்லியா பேச்சில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

ஆரம்பத்தில் நான்கு பெண்களிடம் சகஜமாக பழகி வந்த கவின், சாக்சி மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரிடமும் கொஞ்சம் நெருக்கமாக பழகி வந்தார். இதனிடையே சாக்சி, லாஸ்லியா இருவரில் யாரை காதலியாக தேர்வு செய்வது

விஜய் கொடுத்த தங்கமோதிரத்தை 'பிகில் டிசைனர் என்ன செய்தார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

திருமணத்திற்கு 8 நாள் இருக்கும்போது செல்போனால் பலியான மணப்பெண்

தொழில்நுட்பம் வளர வளர ஆபத்துக்களும் வளர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக சாலையில் நடந்து செல்லும்போதும், வாகனங்களில் பயணம் செய்து கொண்டிருக்கும்போதும்