'பிகில்' பெயரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: விஜய்க்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடிய நிலையில் விஜய் ரசிகர்கள் நேற்றுமுதல் ஒரு சமுதாய விழிப்புணர்வை பணியை ஆரம்பித்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது
'பிகில் படத்தின் பெயரில் தளபதி விஜய் மக்கள் பேரவை சார்பில் விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் மரங்களை நட்டு வருகின்றனர். #BIGILTreePlantingChallenge என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இதுகுறித்த விழிப்புணர்வு சமூக வலைதளங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர்.
மரம் மண்ணின் வரம்! மரம் வளர்ப்பதே மனித அறம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ள விஜய் ரசிகர்களின் போஸ்டர்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'பிகில் படத்தை பிரபலப்படுத்தும் வகையிலும், மரம் வளர்ப்பது குறித்த சமுதாய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மரங்களை நட்டு வருவதாகவும் 'பிகில்' படம் வெளியாகும் முன்னரே லட்சக்கணக்கான மரங்களை நட வேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் நோக்கமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த பணி விஜய்க்கு அவரது ரசிகர்கள் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நேற்றைய 73 வது சுதந்திர தினத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணி இந்த வருடம் முழுவதும் நடைபெறும் என்றும் விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஒரு கோடி மரங்கள் நடவேண்டும் என்ற இலக்கை நோக்கி நடிகர் விவேக் தமிழகம் முழுவதும் மரங்கள் நட்டு வரும் நிலையில், விஜய் ரசிகர்களும் மரங்கள் நட்டு வருவது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த பணி தொடர வேண்டும் என்றும் இதேபோல் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் அவர்களது விருப்பத்திற்குரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளிவரும்போது மரங்கள் நடுவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தால் தமிழகம் விரைவில் பசுமையாக மாறி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout