close
Choose your channels

விஜய்யுடன் மீண்டும் இணைகிறதா 'பிகில்' கூட்டணி?

Thursday, December 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீண்டும் விஜய்யுடன் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் தற்போது ’பீஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இதனையடுத்து அவர் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகவிருக்கும் தமிழ் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 67’ திரைப்படத்தை ‘பிகில்’ தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்தை ‘பிகில்’ படத்தை இயக்கிய அட்லி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அட்லி தற்போது ஷாருக்கான் நடித்துவரும் ’லயன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் தயாரிக்கும் படத்தில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment