'பிகில்' பாண்டியம்மாளின் திருமண நிச்சயதார்த்தம்.. வைரல் புகைப்படங்கள், வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,February 03 2024]

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர் என்பதும் அவரது மகள் இந்திரஜா, விஜய் நடித்த ‘பிகில்’, ர்த்தி நடித்த ’விருமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்திரஜா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது உறவினர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்து அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது அவருடைய திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது.

திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இந்திரஜா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.