பிகில் படத்தின் வசூல் சிங்கம் போன்றது: நடிகர் கார்த்தி 

  • IndiaGlitz, [Wednesday,October 23 2019]

தீபாவளி விருந்தாக இந்த ஆண்டு விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது. இருப்பினும் விஜய்யின் பிகில் படத்தை வெளியிட பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இரண்டு வேடங்களில் விஜய் நடித்து இருப்பது, விஜய்-அட்லி மூன்றாவது முறையாக இணைந்து இருப்பது, ஏஆர் ரகுமான் சூப்பர் ஹிட் பாடல்கள், நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய்யுடன் நயன்தாரா நடித்திருப்பது, 180 கோடியில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான படம், ஏற்கனவே இந்த படத்திற்கு செய்யப்பட்ட பிரமாண்டமான புரமோஷன், அதிகபட்ச எதிர்பார்ப்பு ஆகியவை காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை திரையிட்டால் அதிக லாபம் கிடைக்கும் என்று எண்ணத் தொடங்கி விட்டனர். இதனை அடுத்து இந்த படத்தை போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு திரையரங்கு உரிமையாளர்களும் தங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் செய்கின்றனர்.

இந்த நிலையில் கார்த்தியின் கைதி திரைப்படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. ஆனால் இதனை தயாரிப்பு தரப்பு ஏற்கனவே மறுத்துள்ள நிலையில் தற்போது இது குறித்து கருத்து கூறிய கார்த்தி ’பிகில்’ படத்தின் வசூலில் சிங்கம் போன்றது என்பது உண்மைதான். இருப்பினும் கைதி படத்திற்கு தேவையான திரையரங்குகள் கிடைத்துள்ளது. இந்த படத்தின் பட்ஜெட்டை மீறி இலாபம் எடுக்கும் அளவிற்கு எங்களுக்கு திரையரங்குகள் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

கார்த்தி நடித்த கைதி திரைப்படம் மீடியம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள படம் என்பதால் தமிழகத்தில் 200 முதல் 250 திரையரங்குகளில் வெளியானாலே தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்துவிடும் என்று கூறப்படும் நிலையில் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம் தயாரிப்பாளருக்கு நிச்சயம் லாபம் கொடுக்கும் என கருதப்படுகிறது.