நயன்தாராவின் அடுத்த படத்தில் 'பிகில்' பட நடிகை 

  • IndiaGlitz, [Tuesday,January 07 2020]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த ’தர்பார்’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகிவரும் ’மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் முதன்முதலாக நடித்து வருவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ’மேயாதமான்’ படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய்யின் ’பிகில்’ உள்பட ஒருசில படங்களில் நடித்த இந்துஜா முக்கிய கேரக்டர் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நடிகை இந்துஜா சமீபத்தில் நாகர்கோவிலில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவர் தனது கேரக்டருக்குரிய படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கிருஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

பிரபல இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா-கார்த்தி! பரபரப்பு தகவல்

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. 

சரியான நேரம் வந்தால் அஜித்துடன் படம் பண்ணலாம்..! ஏ. ஆர். முருகதாஸ் பேட்டி.

அஜித்தும் நானும் சரியான சந்தர்ப்பத்தில் இணைவோம் எனத் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

பெண்கள் விளையாட்டில் பங்கு கொள்ளும்போது அதிக நன்மைகளைப் பெற முடியும்

பொதுவாக இந்தியச் சமூகங்களில் பெண்களுக்கான வாழ்வியல் முறைகளில் இருந்து விளையாட்டு பெரும்பாலும் தள்ளி வைக்கப்படுகிறது

'நான் சிரித்தால்' டிரைலரை பார்த்து தளபதி விஜய் கூறிய கமெண்ட்!

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த 'நான் சிரித்தால்' என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் நாயகன் ஆதிக்கு சிரிக்கும் வியாதி இருப்பதால்

NRC கொண்டு வந்தால் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்.. அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் சட்டமன்றத்தில் அறிவிப்பு.

NRC தமிழகத்தில் அமல்படுத்த நினைத்தால் அதை அதிமுக எதிர்க்கும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.