'சூர்யா 42' படத்தில் இணைந்த 'பிகில்', 'டாக்டர்' நடிகர்!

  • IndiaGlitz, [Monday,December 19 2022]

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருப்பதாகவும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பல நட்சத்திரங்கள் இணைந்து உள்ள நிலையில் தற்போது விஜய் நடித்த ’பிகில்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ ஆகிய படங்களில் நடித்த கராத்தே கார்த்தி முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் சூர்யாவுடன் மோதும் ஸ்டண்ட் காட்சிகளை ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷா யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் ஆன பின்னர் அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா இந்த படத்தில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய நான்கு கேரக்டர்களில் நடித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.