ஹரிஷ் கல்யாண் ஜோடியாக 'பிகில்' நடிகை.. அறிமுக இயக்குனரின் த்ரில் படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய்யின் ‘பிகில்’ படத்தில் நடித்த நடிகை நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு ’பார்க்கிங்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இந்துஜா நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே ’மேயாத மான்’ மற்றும் ‘பிகில்’ படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு அப்பார்ட்மெண்டில் கார் பார்க்கிங் இடம் சம்மந்தமான பிரச்சனை எந்த அளவுக்கு பெரிதாகிறது என்பதை த்ரில் கதை அம்சத்துடன் கூறி இருப்பதாக இயக்குனர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் ஐடி நிறுவனத்தின் ஊழியராக ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளதாகவும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த படத்தில் எம் எஸ் பாஸ்கர், இளவரசு உட்பட பலர் நடித்து வருகின்றனர் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Ovvoru padam’mum, enakku unga ellarodayum connect panradhukaana oru Vaipu & here I am with another! 🙏
— Harish Kalyan (@iamharishkalyan) June 23, 2023
So happy to launch the title look of my next film #PARKING.
First look coming soon. Need all your love & support as always. ❤️🤗 #AnbuMattumeKudupom@Actress_Indhuja… pic.twitter.com/ISreV9RM7B
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments