கணவருடன் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டதை 3 மாதங்கள் கழித்து கூறிய பிரபல நடிகை!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார் என்பதும் மகாபலிபுரம் அருகே உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடந்த இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட ’பிகில்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ரெபா மோனிகா ஜான், மூன்று மாதங்களுக்கு பின்னர் இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

விஜய், நயன்தாரா நடித்த ’பிகில்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த மோனிகா, நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டது குறித்து கூறியதாவது: நான் இந்த விஷயத்தை மிகவும் லேட்டாக கூறுகிறேன் என்பது எனக்கு தெரியும். ஆனால் இந்த விலை மதிப்பற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கொடுத்த நயன்தாரா மேடம் அவர்களுக்கு நன்றி.

நயன்தாரா மேடம் மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் இருக்கிறது. அவர் எனக்கு ஒரு மூத்த சகோதரி போன்றவர். அவர் விருப்பப்பட்ட ஒருவருடன் இணைவதை பார்ப்பதை விட வேறு மகிழ்ச்சி எனக்கு இல்லை. அவர் மிகவும் அன்பான ஒரு நபர். நான் அவரை பார்க்கும் போதெல்லாம் என்னுடைய குடும்பத்தில் உள்ள ஒருவரை போலவே உணர்ந்தேன். ஒவ்வொரு நாளும் அவர் சிறப்பாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்று கூறினார்.

கணவருடன் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்ட ரெபா மோனிகாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.