'மாரி 2' வில்லனுடன் ஜோடி சேரும் 'பிகில்'நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் 10 நாள் வசூல் ரூ 200 கோடியை தாண்டி உள்ளதால் இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கால்பந்தாட வீராங்கனை கேரக்டரில் நடித்த ரெபா மோனிகாவின் நடிப்பு பெரும்பாலான விமர்சகர்களால் பாராட்டப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிகில் படத்தின் வெற்றியை அடுத்து தற்போது அவர் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தனுஷ் நடித்த ‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்கும் ‘ஃபாரன்ஸிக்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ரெபா மோனிகா ஒப்பந்தமாகியுள்ளார். ஃபாரன்சிக் அறிவியல் குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் மம்தா மோகந்தாஸ் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அகில் பால் மற்றும் அனாஸ் கான் ஆகியோர் திரைக்கதை எழுதி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், இந்த படம் ரெபா மோனிகாவிற்கு மீண்டும் மலையாளத்தில் ஒரு பிரேக் கொடுக்கும் படமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout