உன்னை நினைத்தால் பெருமையா இருக்குடா: சோம் வீடியோவுக்கு 'பிகில்' நடிகையின் கமெண்ட்!

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை ஒருவர் பிக்பாஸ் சோம்சேகர் பதிவு செய்த வீடியோவுக்கு ’உன்னை நினைத்தால் பெருமையா இருக்குடா’ என கமெண்ட் பதிவு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் ஓட்டு போட்ட அனைவருக்கும், பார்வையாளர்களுக்கும் நன்றியை தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் சமீபத்தில் சோம்சேகர் வெளியிட்ட வீடியோவில் தனக்கு வாக்களித்து, தன்னை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றி என்றும் விரைவில் லைவ்வில் சமூக வலைத்தளம் மூலம் அனைவரிடமும் பேச உள்ளதாகவும் கூறினார்

இந்த வீடியோவுக்கு பல்வேறு கமெண்ட்ஸ்கள் பதிவான நிலையில் பிகில் படத்தில் நடித்த நடிகை ரெபா ஜான் ’உன்னை நினைத்தால் எனக்கு பெருமையா இருக்குடா’ என்று பதிவு செய்துள்ளார். சோம்சேகரின் பதிவுக்கு ஒருமையில் கமெண்ட் செய்யும் அளவிற்கு இருவருக்கும் அப்படி என்ன நெருக்கம்? என்று நெட்டிசன்கள் ஆராய்ச்சி செய்ததில் இருவரும் இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் நடித்து உள்ளனர் என்பது தெரிய வந்தது. அப்போது முதல் இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்து வருகிறார்கள் என்றும் அந்த நட்பின் அடிப்படையில் தான் அவர் இந்த கமெண்ட்டை பதிவு செய்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது

இந்த கமெண்ட்டை தற்போது ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பிக்பாஸ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது