சூரிய உதயத்தின்போது 'பிகில்' நடிகையின் சூப்பர் போட்டோஷூட்!

  • IndiaGlitz, [Sunday,March 14 2021]

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ படத்தில் நடித்த நடிகை ஒருவரின் சமீபத்திய போட்டோஷூட் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான ’மேயாதமான்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை இந்துஜா. அதன்பின் ‘மெர்க்குரி’, ‘பில்லா பாண்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆர்யாவின் ’மகாமுனி’ மூலம் நாயகியாக அவதாரம் எடுத்தார்.

மேலும் தளபதி விஜய்யின் ‘பிகில் மற்றும் சமீபத்தில் வெளியான ஆர்ஜே பாலாஜியின் ’மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள இந்துஜா, தற்போது ’காக்கி’ ’நெற்றிக்கண்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இந்துஜா சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூரிய உதயத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோஷுட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். சூரிய உதயத்தின் போது எடுக்கப்பட்ட விதவிதமான புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் வழக்கம்போல் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களும், கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகின்றன.

இதில் பதிவில் நடிகை இந்துஜா கேப்ஷனாக ’சூரியன் உதிக்கும் போது நாமும் உதிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.