'பிகில்' நடிகை பாண்டியம்மாளுக்கு திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவான ’பிகில்’ திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனை பாண்டியம்மாள் என்ற கேரக்டரில் நடித்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு விரைவில் திருமணம் என்றும் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ உட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் ரோபோ சங்கர். அதன் பிறகு வெள்ளித்திரையிலும் காமெடி நடிகரான இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் இந்திரஜா, திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. விஜய்யின் ’பிகில்’ படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்த இவர் கார்த்தி நடித்த 'விருமன்’ படத்தில் நாயகி அதிதி சங்கருக்கு தோழியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது முறை மாமனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் ரசிகர்கள் அவரைத்தான் நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த இந்திரஜா, ’ஆம்’ என்றும் விரைவில் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்திரஜாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com