புதிய அவதாரம் எடுத்த பிக்பாஸ்....! இதில் வெளியானத்திற்குப்பின் தான் டிவியில்....?
Send us your feedback to audioarticles@vaarta.com
பல மொழிகளில் வெளிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது, முதன்முதலாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் கூறுகிறது.
மக்களிடத்தில் பரீட்சையமான நிகழ்ச்சியான பிக்பாஸ்-ஐ இனி, முதல் 6 வாரங்களுக்கு வூட் (voot) ஆப்-பில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது வியாகாம் 18. முதன் முதலாக "பிக்பாஸ் OTT" என்ற தலைப்பில், வரும் ஆகஸ்ட் 2021 முதல் வெளியாக உள்ளது. பிக்பாஸ் வாடிக்கையாளர்களுக்கு இது புதுவிதமான அனுபவத்தை தரக்கூடியது.
OTT-யில், பார்வையாளர்களுக்கு முக்கியமான தகவல் என்னவென்றால், எக்ஸ்க்ளூசிவ் கண்டெண்டுகளை இந்த ஆப்-பில் பார்க்கலாம். 24*7 என பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அனைத்தும் நிகழ்வுகளையும் லைவ்-ஆக, பார்க்கலாம். ஓடிடி-யில் ஒளிபரப்பிய பின், பிக் பாஸ் சீசன் 15-ஐ கலர்ஸ் தொலைக்காட்சியில் ரசிகர்கள் பார்க்கலாம்.
இதுகுறித்து வியாகாம் 18 டிஜிட்டல் அதிகாரி கெளரவ் ரக்ஷித் கூறியிருப்பதாவது, " தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதற்கு முன்பே, ஓடிடி-யில் இந்நிகழ்ச்சி வெளியாவது டிஜிட்டல் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார். இதனால் ஹிந்தி பிக் பாஸ் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் வெளியாவது குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments