என் குடும்பத்தில இருந்து யாருமே வரல்ல.. வருத்தத்துடன் கூறிய ஷிவினுக்கு கமல் கூறிய ஆறுதல்!

  • IndiaGlitz, [Sunday,January 01 2023]

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் போட்டியாளர்களில் உறவினர்கள் வருகை தந்தார்கள் என்பதும் உறவினர்களை பார்த்ததும் போட்டியாளர்கள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஷிவின் தனது குடும்பத்தினரை பிரிந்து வாழ்ந்து வருவதால் அவரது குடும்பத்தில் இருந்து யாரும் வரவில்லை என்பதும் அவரது தோழி மற்றும் நண்பர்தான் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து கமல்ஹாசன் போட்டியாளர்கள் அனைவரிடமும் கேட்கிறார். அப்போது ஷிவினிடம், ‘நீங்கள் எதிர்பார்ப்பது யாரை? யார் உங்களை பார்க்க வந்தார்கள் என்று கமலஹாசன் கேட்க அதற்கு ஷிவின், ‘99% என்னுடைய வீட்டிலிருந்து வரமாட்டார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் உள்ளே ஒரு ஆசை இருந்தது’ என்று கூறியபோது கமல்ஹாசன் ’நீங்கள் வந்ததே உங்களை ஏற்றுக்கொள்ளும் அடுத்த கட்டத்திற்கு உங்கள் வீட்டை நீங்கள் தயாராக்கி விட்டீர்கள் என்று கூறினார்

இதனையடுத்து ’ஸ்டோர் ரூமில் ஒரு பொருள் இருக்கிறது என்று அதை எடுத்து வாருங்கள் என்று கமல்ஹாசன் அசீமிடம் கூறினார். அந்த பொருளை பார்த்ததும் அசீம், கமலஹாசனிடம் ‘நன்றி சார்’ என்று கூறுவதுடன் இன்றைய அடுத்த புரமோ முடிவுக்கு வந்ததால் அந்த பொருள் என்ன என்பதை இன்றைய எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்வோம்.