close
Choose your channels

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் இவர்களா? 

Wednesday, August 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே நான்கு சீசன்கள் முடிவடைந்துவிட்ட நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாவது சீசன் 5 வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கும் என்று கூறப்படும் நிலையில் அதற்கான போட்டியாளர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் கசிந்த நிலையில் தற்போது இது குறித்து மேலும் சிலரது பெயர்கள் அடிபடுகின்றன. குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமான கனி, சுனிதா மற்றும் பாபா பாஸ்கர் ஆகிய மூவரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் ஷகிலா மகள் மிலா, டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து, சார்பாட்டா பரம்பரை நடிகர் ஜான் விஜய் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. மேலும் பிக்பாஸ் 4 சீசனில் கலந்துகொண்ட சமந்தாவின் தோழியாக ப்ரதாயினி அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் 5 சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.