இந்த வார வைல்ட்கார்ட் போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கி இதுவரை 6 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும் ஒரு போட்டியாளர் தானாகவே வெளியேறி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 11 போட்டியாளர்கள் இருந்த நிலையில் கடந்த வாரம் ரீ என்ட்ரி ஆக அபிஷேக் வந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வாரம் இன்னொரு போட்டியாளர் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைல்ட்கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக இருவரின் பெயர் கூறப்பட்டு வருகிறது. ஒருவர் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், தொலைக்காட்சி சீரியல் நடிகருமான சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அதே போல் இன்னொருவர் நடன இயக்குனர் சதீஷ். இவர் விஜய் டிவிக்கு நெருக்கமானவர் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் செல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாரம் வைல்ட்கார்ட் எண்ட்ரி ஆவது சஞ்சீவா? அல்லது சதீஷா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.