இதுதான் முதலும் கடைசியும்.. சாச்சனாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த பிக்பாஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 24 மணி நேரத்தில் எலிமினேஷன் செய்யப்பட்ட சாச்சனா மீண்டும் என்ட்ரி ஆகியுள்ள நிலையில் அவருக்கு பிக் பாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு எச்சரிக்கையும் விடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய நிலையில் 18 போட்டியாளர்கள் இடம் பெற்றனர் என்பது தெரிந்தது. அதில் ஒருவரான விஜய் சேதுபதி நடித்த ’மகாராஜா’ திரைப்படத்தின் நடிகை சாச்சனா 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அதே நேரத்தில் வெளியேற்றப்பட்ட ஐந்தாவது நாளில் மீண்டும் சாச்சனா என்ட்ரி ஆகி உள்ள நிலையில், வெளியே உள்ள சில விஷயங்களையும், வெளியே இருந்த நான்கு நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த சில விஷயங்களை போட்டியாளர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.
இதனை அடுத்த பிக் பாஸ் அவருக்கு எடுத்த எச்சரிக்கையில் ’சாச்சனா கவனத்திற்கு, வெளி உலகத்தை பற்றியோ அல்லது நீங்கள் எபிசோடை பார்த்ததை பற்றியோ கண்டிப்பாக ஹவுஸ்மேட்களிடன் ஷேர் செய்ய கூடாது, இதுவே முதலும் கடைசியுமான எச்சரிக்கை’ என்று தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Sivaji sethu pala varusham aagudhu moment
— Imadh (@MSimath) October 12, 2024
Yov BiggBoss, idhan unga tak ah?#biggbosstamil #biggbosstamil8pic.twitter.com/knLjM81n1r
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments