எதிர்பாராத திருப்பம்: இந்த வாரம் டபுள் எவிக்சன், யார் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை குறைந்த வாக்குகள் பெற்ற போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்பதும் அந்த வகையில் இந்த வாரம் அக்சரா வெளியேற்றப்பட்டார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வாரம் டபுள் எவிக்சன் என்றும் அக்சரா உடன் சேர்த்து இன்னொரு போட்டியாளரும் வெளியேற்றப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட 6 பேர்களில் அக்சரா, வருண் மற்றும் நிரூப் ஆகிய மூவரும் கிட்டத்தட்ட ஒரே சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் அவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற அக்சரா எலிமினேட் நிலையில் அவருடன் வருணும் எலிமினேட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி மீதமிருக்கும் நிலையில் அக்சரா, வருண் எலிமினேஷனுக்கு பின் தற்போது 8 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பதால் இனி வரும் வாரங்களிலும் டபுள் எவிக்சன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com