அபினய் - பாவனி சர்ச்சையில் ஒரே நாளில் நடந்த மாற்றம்: பிக்பாஸ் தலையிட்டாரா?

அபினய்க்கும் தனக்குள் இருக்கும் உறவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராஜு மற்றும் சிபியுடன் நேற்று ஆவேசமாக சண்டை போட்ட பாவனி, இன்று திடீரென அவர்களை கட்டிப்பிடித்து சமாதானம் ஆனது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் சண்டை மற்றும் சமாதானம் என்பது சர்வ சாதாரணமாக நடந்து வரும் என்பதை கடந்த நான்கு சீசன்களாக பார்த்து வருகிறோம். அதேபோல் இந்த சீசனிலும் அபினய்க்கும் தனக்கும் இருக்கும் உறவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராஜூ மற்றும் சிபி மீது நேற்று ஆவேசமாகப் பாவனி சண்டை போட்டார்.

இந்த சண்டைக்கு பிறகு மீண்டும் மூவருக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் இருக்காது என்றே சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் கருதினர். ஆனால் சண்டைபோட்டு ஒரே ஒரு நாள் மட்டுமே ஆகிய நிலையில் இன்று அனைவரும் உட்கார்ந்து சாப்பிடும் போது, தான் சண்டை போட்டவர்களிடம் சமாதானமாக பாவனி சமாதானமாக விரும்பினார்.  

இதனை அடுத்து அவர் நேராக ராஜுவிடம் சென்று அவரை கட்டிப்பிடித்து சமாதானம் ஆனார். அதேபோல் இமான் அண்ணாச்சி, சிபி ஆகியோர்களையும் கட்டிப்பிடித்துக்கொண்டு சமாதானம் ஆனது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அபினய், பாவனி குறித்த இந்த உறவுகள் குறித்த சர்ச்சையில் அவர்களது குடும்ப வாழ்க்கையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் எந்த ஒரு சிக்கலும் ஏற்படுத்திவிடக்கூடாது என்ற காரணத்தினால் இந்த சர்ச்சையில் பிக்பாஸ் தலையிட்டு சமாதானம் செய்து வைத்திருக்க வாய்ப்பு இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.