பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் தெரியும், பிக்பாஸ்க்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம். அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் சம்பளம் கூட ஊடகங்களில் வெளியானது. ஆனால் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரருக்கு எவ்வளவு சம்பளம் என்பது இதுவரை யாருக்குமே தெரிந்திருக்காது

பிக்பாஸ் குரலை மட்டுமே இதுவரை அனைவரும் கேட்டு இருந்த நிலையில் அந்த முகத்தை கூட யாரும் பார்த்ததாக நிலையில் அவருடைய சம்பளத்தை எப்படி தெரிந்து கொள்வது என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர் பெயர் சச்சிதானந்தம் என்றும் சமீபத்தில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு பேசி இருந்த நிலையில் அந்த வீடியோவில் உள்ள குரலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த குரலும் ஒரே மாதிரியாக இருந்ததை அடுத்து நெட்டிசன்கள் அவர்தான் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் என கண்டுபிடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி தற்போது அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவலும் கசிந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கம்பீரமாக பேசி வரும் சச்ச்சிதானந்தாவுக்கு மாதம் ஐந்து லட்ச ரூபாய் சம்பளம் என்றும் கூறப்பட்டு வருகிறது.