விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: எச்சரிக்கை விடுத்த பிக்பாஸ் விஜே மகேஸ்வரி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீசனின் வின்னராக அசீம் தேர்வு செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான மகேஸ்வரி 35 வது நாட்களிலேயே வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றம் குறித்து கடுமையான விமர்சனங்களை நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அசீமுக்கும் மகேஸ்வரிக்கும் காரசாரமான சண்டைகள் நடந்தது என்றும் அதுமட்டுமின்றி எவிக்சனுக்க்கு பிறகு விருந்தினராக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றபோதும் கூட அவர் அசீமுடன் காரசாரமாக விவாதம் செய்தார்.
இதனை அடுத்து மகேஸ்வரியை அசீம் ஆதரவாளர்கள் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர். அவரது ஒவ்வொரு பதிவிற்கும் மிக மோசமான கமெண்ட்ஸ்களையும் பதிவு செய்தனர். அவரை மட்டும் இன்றி அவரது மகன் குறித்தும் மோசமான பதிவை செய்ததால் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது மகனை கட்டிப்பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘என் மகன் ஒரு போராளியாக இருப்பதற்கு நன்றி, நச்சு ஆண்மை நிறைந்த இந்த உலகத்தை நீ பெண்களுக்கான சிறந்த உலகமாக மாற்றப் போகிறாய் என்று நான் நம்புகிறேன். நீ அவ்வாறாக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். உன்னை நான் பாதுகாப்பேன்’ என்று கூறியுள்ளார். மேலும் மோசமாக விமர்சனம் செய்பவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Thank you for being a warrior!!! My boy .. Iam sure your gonna make this world filled with toxic masculinity a better world for women . You I’ll be the change and Iam proud of it 😍 mom will protect you .Note:complaint will be filed and legal action will be taken shortly 🙏 pic.twitter.com/HOo1RsaAuK
— Vj_Maheswari (@maheswarichanak) February 6, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com