close
Choose your channels

இதைவிட சிறப்பான இடம் எது? நாய்கள் கூட்டத்தின் நடுவில் பிக்பாஸ் மகேஸ்வரி..!

Wednesday, April 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான விஜே மகேஸ்வரி நாய்கள் கூட்டத்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விஜே மகேஸ்வரி மிகவும் சிறப்பாக விளையாடி வந்தார் என்பதும் ரசிகர்களின் ஆதரவு அவருக்கு அதிகமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் 35 வது நாளிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மகேஸ்வரி குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் செல்ல நாய்கள் கூட்டத்துடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் பெரும் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக அவர் வெளிநாட்டு சுற்றுலாவில் இருக்கும் நிலையில் பாங்காக்கில் உள்ள ஒரு இடத்தில் தான் அவர் நாய்களுடன் இருக்கும் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். மேலும் ’இதைவிட ஒரு மகிழ்ச்சியான இடத்தை உங்களால் காட்ட முடியுமா’ என்றும் அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment