'பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது வெளியே 'தமிழ்நாடு' சர்ச்சை.. விக்ரமன் வெளியிட்ட தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் முடிவடைந்த நிலையில் இந்த சீசனில் இரண்டாம் இடம் பெற்ற விக்ரமன் ’வெளியே தமிழ்நாடு என்ற சர்ச்சை நடைபெற்றுக் கொண்டிருப்பது தெரியாமல் உள்ளே தமிழ்நாடு குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ’கலக்கப்போவது யாரு சாம்பியன் சீசன் 4’ நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவில் இது குறித்து விக்ரமன் தெரிவித்துள்ளார்
’பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் உள்ளே தமிழ்நாடு குறித்து பேசும்போது வெளியேவும் அது குறித்த ஒரு விஷயம் நடந்தது, இதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று நடுவர்களில் ஒருவரான மதுரை முத்து கேட்டார். அப்போது விக்ரமன் விளக்கம் அளித்த போது ’நான் வெளியே வந்த போது அது எனக்கு வியப்பாக இருந்தது, பொங்கல் தினத்தில் நாம் மறந்துவிடும் ஒரு விஷயம் என்னவென்றால் தமிழ்நாடு என்ற பெயர் நமது மாநிலத்திற்கு வந்த நாள் அதுதான். பெரிய போராட்டத்திற்கு பின்னர் அது நமக்கு கிடைத்தது.
தியாகி சங்கரலிங்கனார் என்பவர் 18 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்ததை அடுத்து பாராளுமன்றம் வரை போராடி பெற்றதுதான் தமிழ்நாடு என்ற பெயர் பெற்றோம். அந்த தினத்தை நாம் அனைவரும் மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் அதை சொன்னேன், ஆனால் அதே நேரத்தில் வெளியேவும் அது குறித்த நிகழ்வு நடந்தது நான் வெளியே வந்து பார்த்ததும் நான் ஆச்சரியப்பட்டேன் என்று கூறினார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
🔥
— Vijay Television (@vijaytelevision) February 24, 2023
கலக்கப்போவது யாரு Champions Season 4 - வரும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KPYChampions4 #KPY #KPYChampions #VijayTelevision pic.twitter.com/PMd7C6kweV
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments