விஜய் பட இயக்குனரின் அடுத்த படத்தில் 'பிக்பாஸ்' விஜயலட்சுமி

  • IndiaGlitz, [Saturday,October 13 2018]

கமல்ஹாசன் நடத்திய 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்தாலும் சக போட்டியாளர்களுக்கு ஈடுகொடுத்து மூன்றாம் இடத்தை பெற்றவர் நடிகை விஜயலட்சுமி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலருக்கு ஏற்கனவே சினிமா வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் தற்போது விஜயலட்சுமிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

வெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்க விஜயலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை விஜயலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 600028' படத்தின் இரண்டு பாகங்களிலும் விஜயலட்சுமி நடித்துள்ள நிலையில் தற்போது அவரது தயாரிப்பில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நடித்த 'புலி' உள்பட ஒருசில படங்களை இயக்கிய சிம்புதேவன் சமீபத்தில் இயக்கி வந்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' திரைப்படம் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்டது. இந்த நிலையில் வெங்கட்பிரபு நிறுவனத்தின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்கும் அடுத்த படத்தின் பணிகளில் தற்போது சிம்புதேவன் உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

More News

'தேவர் மகன் 2' குறித்து கமல்ஹாசன் அறிவிப்பு

கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம் 2' சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் அவர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

முன்னாள் தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58

'சர்கார்' உடன் தீபாவளி ரேஸில் இணையும் இன்னொரு படம்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் இந்த படத்துடன் தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா',

'ஐரா' படத்தில் நயன்தாராவின் கேரக்டர் குறித்த தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக வெட்ட வேண்டும்: பிரபல நடிகர்

பிரபல மலையாள நடிகர் கொல்லம் துளசி என்பவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை இரண்டாக வெட்டி போட வேண்டும் என்று ஒரு நிகழ்ச்சியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.