திரைத்துறையில் விசித்ராவுக்கு ஏற்பட்ட கொடுமை.. குரல் கொடுப்பாரா வுமன் சேஃப்டி கமல்ஹாசன்?

  • IndiaGlitz, [Wednesday,November 22 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பூகம்பம் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக தங்கள் வாழ்க்கையை நடந்த கசப்பான சம்பவம் குறித்து போட்டியாளர்கள் கண்ணீர் கதைகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் விசித்ரா தனது கதையை கூறிய போது பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்த போது, அந்த படத்தின் ஹீரோவிடம் தன்னை அறிமுகம் செய்ய முயன்ற போது தன்னுடைய பெயரை கூட கேட்காமல் நைட் ரூமுக்கு வந்திரு என்று சொன்னதாகவும் ஆனால் ரூமுக்கு செல்லாததால் அவர் பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாகவும் கூறினார்.

அதன் பிறகு ஓட்டல் ஊழியர் ஒருவர் தான் தன்னை வேறு ஒரு அறையில் தங்க வைத்து காப்பாற்றியதாகவும் தெரிவித்த அவர் பின்னாளில் அந்த ஹோட்டல் ஊழியரை தான் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஒரு காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடந்ததாகவும் இதை கையும் களவுமாக பிடித்து ஸ்டண்ட் இயக்குனரிடம் கூறியபோது அவர் தன்னுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

தன்னை இரவில் ரூமுக்கு வரச்சொன்ன நடிகர் குறித்து நடிகர் சங்கத்திடம் புகார் அளித்தும் பலன் இல்லாமல் அதன் பிறகு காவல்துறையில் புகார் அளித்ததாகவும் அந்த சம்பவத்திற்கு பிறகு சினிமாவை விட்டு வெளியேறி விட்டதாகவும் அவர் கூறினார். அந்த ரணத்தில் இருந்து தன்னால் மீளவே முடியவில்லை என்றும் 20 ஆண்டுகளாக மீண்டும் சினிமாவிற்குள் வர முடியவில்லை என்றும் கண்ணீர் மல்க கூறினார்.

அவர் கூறிய இந்த சம்பவம் தெலுங்கு படத்தில் நடித்த போது நடந்தது என்றும் தெலுங்கில் திரையுலகில் ஒரே அடியில் 100 பேர்களை அடித்து பறக்கவிட்டு பந்தாடும் நடிகர் தான் அந்த ஹீரோ என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த படத்தின் பெயரையும் நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர். அதேபோல் விசித்ராவை கன்னத்தில் அறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் பெயரையும் நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களுக்கு பிரதீப்பால் ஆபத்து என்று கூறி உமன் சேஃப்டி என்ற காரணத்தால் அவரை வெளியேற்றிய கமல்ஹாசன், விசித்ராவுக்கு திரை துறையில் நடந்த இந்த கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சித்தார்த்தின் 'சித்தா': புதிய ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட “சித்தா” திரைப்படம், நவம்பர் 28 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படம் நவம்பர் 17ஆம் தேதி

மாயா, பூர்ணிமா கேங்கில் இருந்து விலகிவிட்டாரா? மறைமுகமாக தெரிவித்த ஜோவிகா..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஜோவிகா ஆரம்பத்தில் தனித்து விளையாடிய நிலையில் கடந்த சில நாட்களாக அவர் மாயா  பூர்ணிமா கேங்கில் இருந்து வருகிறார் என்பது பார்வையாளர்களுக்கு தெரிந்திருக்கும்.

'கலைஞர் 100' விழாவில் அஜித் கலந்து கொள்வாரா? ஆர்கே செல்வமணி பதில்..!

திரை உலகினர் சார்பில் கலைஞர் 100' என்ற விழா டிசம்பர் 24ஆம் தேதி நடத்தப்பட இருக்கும் நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்

த்ரிஷா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்சூர் அலிகான் இதை செய்ய வேண்டும்: பாரதிராஜா

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் இந்த பிரச்சனைக்கு மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நடப்பு தயாரிப்பாளர்

'ஜெயிலர்' படத்தின் மாஸ் கேரக்டருக்கு இணையானது: 'தளபதி 68' குறித்து ஜெயராம்..!

'ஜெயிலர்' படத்தில் நடித்த மாஸ் கேரக்டருக்கு இணையானது 'தளபதி 68' படத்தில் என்னுடைய கேரக்டர் என நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.