திரைத்துறையில் விசித்ராவுக்கு ஏற்பட்ட கொடுமை.. குரல் கொடுப்பாரா வுமன் சேஃப்டி கமல்ஹாசன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பூகம்பம் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக தங்கள் வாழ்க்கையை நடந்த கசப்பான சம்பவம் குறித்து போட்டியாளர்கள் கண்ணீர் கதைகளை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் விசித்ரா தனது கதையை கூறிய போது பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்த போது, அந்த படத்தின் ஹீரோவிடம் தன்னை அறிமுகம் செய்ய முயன்ற போது தன்னுடைய பெயரை கூட கேட்காமல் நைட் ரூமுக்கு வந்திரு என்று சொன்னதாகவும் ஆனால் ரூமுக்கு செல்லாததால் அவர் பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாகவும் கூறினார்.
அதன் பிறகு ஓட்டல் ஊழியர் ஒருவர் தான் தன்னை வேறு ஒரு அறையில் தங்க வைத்து காப்பாற்றியதாகவும் தெரிவித்த அவர் பின்னாளில் அந்த ஹோட்டல் ஊழியரை தான் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஒரு காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடந்ததாகவும் இதை கையும் களவுமாக பிடித்து ஸ்டண்ட் இயக்குனரிடம் கூறியபோது அவர் தன்னுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
தன்னை இரவில் ரூமுக்கு வரச்சொன்ன நடிகர் குறித்து நடிகர் சங்கத்திடம் புகார் அளித்தும் பலன் இல்லாமல் அதன் பிறகு காவல்துறையில் புகார் அளித்ததாகவும் அந்த சம்பவத்திற்கு பிறகு சினிமாவை விட்டு வெளியேறி விட்டதாகவும் அவர் கூறினார். அந்த ரணத்தில் இருந்து தன்னால் மீளவே முடியவில்லை என்றும் 20 ஆண்டுகளாக மீண்டும் சினிமாவிற்குள் வர முடியவில்லை என்றும் கண்ணீர் மல்க கூறினார்.
அவர் கூறிய இந்த சம்பவம் தெலுங்கு படத்தில் நடித்த போது நடந்தது என்றும் தெலுங்கில் திரையுலகில் ஒரே அடியில் 100 பேர்களை அடித்து பறக்கவிட்டு பந்தாடும் நடிகர் தான் அந்த ஹீரோ என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த படத்தின் பெயரையும் நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர். அதேபோல் விசித்ராவை கன்னத்தில் அறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் பெயரையும் நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களுக்கு பிரதீப்பால் ஆபத்து என்று கூறி உமன் சேஃப்டி என்ற காரணத்தால் அவரை வெளியேற்றிய கமல்ஹாசன், விசித்ராவுக்கு திரை துறையில் நடந்த இந்த கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#BiggBossTamil7 SHOCKING - #Vichitra shares her bad experiences while shooting for a Telugu film 🙄😮#BiggBoss7Tamil #BiggBossTamilSeason7pic.twitter.com/AUnwTIxv6r
— VCD (@VCDtweets) November 21, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com