கருப்பா இருக்கிறவங்க கட்டிப்புடிக்க கூடாதா? வேல்முருகன் கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய வேல்முருகன் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் அவரது பேட்டிகள் குறித்து ஏற்கனவே பார்த்தோம்.

இந்தப் பேட்டியில் சனம் ஷெட்டியை டாஸ்க் ஒன்றின்போது வேல்முருகன் கட்டிப்பிடித்தது சர்ச்சைக்குரிய விஷயம் ஆனதையும், இதுகுறித்து நெட்டிசன்கள் கிண்டல் செய்தும் மீம்ஸ்கள் வெளியிட்டது பற்றியும் கேட்கப்பட்டது. அதற்கு வேல்முருகன் கூறியதாவது:

அந்தப் பந்து டாஸ்க்கில் நானும் சனமும் வெற்றி பெற மாட்டோம் என்று அனைவரும் கருதினார்கள். ஆனால் அவர்களது எண்ணத்தை தவிடு பொடியாக்கும் வகையில் நாங்கள் அந்த டாஸ்க்கில் வெற்றிபெற்றோம். அந்த மகிழ்ச்சியில் தான் நான் அவரைக் கட்டிப்பிடித்தேன். மற்றபடி தவறான எண்ணம் எதுவும் கிடையாது. அந்த டாஸ்க்கிற்கு முன்னரும் சரி, அதற்கு பின்னரும் சரி நான் யாரையும் கட்டி பிடித்ததே இல்லை.

இதைவிட மோசமாக அந்த வீட்டில் பல நிகழ்வுகள் நடந்து உள்ளது. அதை பற்றியெல்லாம் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். கருப்பா இருக்குறவங்க என்ன செஞ்சாலும் தப்பு கண்டுபிடிப்பாங்க. ஏன் சினேகன் கட்டிப்பிடித்ததையும் நான் கட்டிப்பிடித்ததையும் மட்டும் விமர்சனம் செய்கின்றீர்கள்? சினேகனும் நானும் மனிதர்கள் இல்லையா? கருப்பா இருக்கிற நாங்க விலங்குகளா? என அடுக்கடுக்காக வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

More News

அட ஜேம்ஸ் கேமரூன் நீங்களா? இயக்குனரை கலாய்த்த நெட்டிசன்ஸ்!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

தீபாவளி கொண்டாட்டம்… பசுமை பட்டாசு தேர்வு? அஜீரணக் கோளாறு?? சில எளிமையான வழிமுறை!

தீபாவளி என்றாலே கலர் கலரான இனிப்பு வகைகள், பொறிபொறியான பட்டாசுகள், புத்தாடை இதுதான் நினைவுக்கு வரும்

அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் நேற்று முன் கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு ரசிகர்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள்,

'மாநாடு' படத்தின் சூப்பர் சீக்ரெட்டை வெளியிட்ட சிம்பு!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும், இந்த படத்தின் டப்பிங் பணியையும் சிம்பு முடித்துவிட்டார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

7 பேரின் விடுதலை தொடர்பாக இரட்டை வேடம் போடும் திமுக… அம்பலப்படுத்திய அதிமுக தரப்பு!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன்