ரஜினி கட்சியில் இணைகிறாரா பிக்பாஸ் வேல்முருகன்? அவரே அளித்த விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாடகரும், பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான வேல்முருகன் சமீபத்தில் ரஜினியுடன் இணைந்த ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருந்தார். இதனை அடுத்து அவர் ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் சேர இருப்பதாக சமூகவலைதள பயனாளிகள் கருத்து தெரிவித்தனர்
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பிக்பாஸ் வேல்முருகன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை நான் எனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளேன். அந்த பதிவை அடுத்து பல கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில் இதற்கு நான் ஒரு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்
நான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் அவர்களை சந்திப்பதற்காக அனுமதி பெற்று இருந்தேன். அப்போது நான் என் மனைவி குழந்தைகளுடன் சென்று அவரை சந்தித்தேன். நான் அவருக்கு பல்வேறு விதமான பாடல்களைப் பாடிக்காட்டி கொண்டிருந்தபோது என்னுடைய தாய் குறித்து ஒரு பாடலை பாடினேன். அப்போது அவர் மிகவும் நெகிழ்ச்சியுடன் என் அருகே வந்து எனக்கு பாராட்டு தெரிவித்து, அருகில் இருந்த உதவியாளரை அழைத்து புகைப்படம் எடுக்கச் சொன்னார். அந்த புகைப்படம் நான் எடுக்கவில்லை. அந்த புகைப்படத்தை பின்னர் ரஜினியின் உதவியாளர் எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார்
இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து உள்ளார் என்ற தகவல் தெரிந்தவுடன் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அந்த புகைப்படத்தை நான் பதிவு செய்தேன். மற்றபடி வேறு எந்த உள்நோக்கமும் அந்த பதிவில் இல்லை
ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்தபோது எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவர் மிகவும் எளிமையாக இருக்கிறார் என்பதை நான் அறிந்து கொண்டேன். அவரிடம் இருந்து நான் பல விஷயங்களை கற்று கொண்டேன்’ என்று வேல்முருகன் அந்த புகைப்படத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார். இதனை அடுத்து ரஜினி கட்சியில் தான் சேரவில்லை என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார்
Superstar உடன் ஒரு மறுக்கமுடியாத உரையாடலின் பொழுது! #SingerVelmuruganOfficial #BiggBossVelmurugan #Superstar #SuperstarRajinikanth #Thalaivar #rajini #thalaivar #superstar #rajinikanthfanclub #rajinism #rajni #kollywood #rajinifanforever #rajinikanthfans #thalaivarforever pic.twitter.com/0ND8C6nM7P
— Singer Velmurugan (@velmurugan_off) December 4, 2020
நான் #SuperStar-உடன் இணைந்தேனா?#SingerVelmuruganOfficial #BiggBossVelmurugan #SuperstarRajinikanth #Thalaivar #rajini #thalaivar #superstar #rajinikanthfanclub #rajinism #rajni #kollywood #kaala #rajinifanforever #rajinikanthfans #thalaivarforever pic.twitter.com/KJLpYAtINd
— Singer Velmurugan (@velmurugan_off) December 4, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com