பிக்பாஸ் வருண் ஆர்மிகளுக்கு சூப்பர் செய்தி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான வருண் நடித்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ஆர்மியினர் இதனை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான வருண் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உறவினர் என்பதும் அவரது தயாரிப்பில் உருவாகிவரும் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற திரைப்படத்தில் வருண் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் நாயகியாக நடித்த ராஹி என்பவர் தான் பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ்வை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என கூறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை 5.27 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வருண் 80 நாட்களை தாண்டி வெற்றிகரமாக இருக்கும் நிலையில் அவர் நடித்த படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருப்பது அவரது ஆர்மிகளுக்கு உற்சாகமான செய்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The Most Anticipated @iamactorvarun starring @menongautham Directorial #JOSHUA's Action Packed Trailer Releasing Tomorrow at 5:27 PM | 2⃣4⃣ Hrs to Go#JoshuaTrailer@VelsFilmIntl @Actor_Krishna @iamRaahei @srkathiir @singer_karthik @editoranthony @DhivyaDharshini #Varun pic.twitter.com/bEVBflKejR
— Vels Film International (@VelsFilmIntl) December 24, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com