வருணுக்கு வாழ்த்து கூறிய பிக்பாஸ் டைட்டில் வின்னர்: வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய வருண், பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியை சந்தித்து வாழ்த்து பெற்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான வருண் மிகவும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பாக டாஸ்குகளில் மிகவும் ஈடுபாட்டுடன் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 80 நாட்களை கடந்து வருண் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அக்ஷரா உடன் வெளியேற்றப்பட்டார். இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் அக்ஷரா உள்பட ஒரு சிலரை வருண் சந்தித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரியை வருண் சமீபத்தில் சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை ஆரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
தம்பி வருணை சந்தித்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. கண்டிப்பாக பிக் பாஸ் உங்களுக்கு நல்ல பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் மிகவும் சிறப்பாக விளையாடினீர்கள். பிக்பாஸ் வீட்டில் உங்களது பயணம் தான் முடிந்திருக்கிறது, ஆனால் கலை உலகில் உங்களது பயணம் தற்போதுதான் தொடங்கியுள்ளது. உங்களின் கலைப்பயணத்துக்கு எனது இனிய வாழ்த்துக்கள்’ என ஆரி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout