'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைகிறாரா பிக்பாஸ் வருண்?

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் வருண் இருக்கும் புகைப்படம் வைரலானதை அடுத்து இந்த படத்தில் வருண் நடிக்கின்றாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 80 நாட்களுக்கும் மேல் தாக்குப் பிடித்து விளையாடி தற்போது வெளியே வந்திருக்கும் வருண், பல திரையுலக பிரபலங்களை சந்தித்து வருகிறார் என்பது குறித்த செய்தியை பார்த்து வருகிறோம். அந்தவகையில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பில் வருண் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சிம்புவும் வருணும் சிரித்தபடியே இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த பல நெட்டிசன்கள் ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் வரும் ஒரு முக்கிய கேரக்டரில் வருண் நடிக்கின்றாரா? என்றகேள்வியை எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே இந்த படம் வருணின் மாமா ஐசரி கணேஷ் தயாரிக்கும் படம் என்பதும் இந்த படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் ’ஜோஷ்வா இமை போல் காக்க’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .