எலிமினேஷனுக்கு பின்னர் சந்தித்து கொண்ட வருண்-அக்சரா: வைரல் புகைப்படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களான வருண் மற்றும் அக்சரா கடந்த ஞாயிறு அன்று வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கு பின் இருவரும் சமீபத்தில் சந்தித்து கொண்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே வரும்போது ஸ்ருதியுடன் உள்ளே வந்த அக்சரா, வெளியே போகும்போது வருண் உடன் வெளியே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வருண் மற்றும் அக்சரா ஆகிய இருவரும் ஒரே நாளில் வெளியேற்றப்பட்ட நிலையில் இருவரும் சமீபத்தில் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வருண் நடித்த ‘ஜோஸ்வா இமை போல் காக்க’ என்ற படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸான நிலையில் இந்த டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து விரைவில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.