பிக்பாஸ் வைஷ்ணவியின் காதலன் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளர்களில் டேனியல் மற்றும் மகத் ஆகிய இருவருக்கு மட்டுமே வெளியே அவரவர் காதலிகள் வெயிட்டிங் என்பது தெரியும். ஆனால் வைஷ்ணவிக்கும் காதலர் இருந்த விபரம் தற்போது தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட வைஷ்ணவி, அஞ்சன் என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், அஞ்சன் ஆஸ்திரேலியாவில் விமானியாக பணியாற்றுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த தகவலை வைஷ்ணவி ஒப்புக்கொண்டதோடு இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
வைஷ்ணவியை காதலிப்பதாக அஞ்சன் பல மாதங்களுக்கு முன்னரே டுவிட்டரில் போஸ்ட் போட்டிருந்தாலும், வைஷ்ணவி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் தான் அந்த போஸ்ட்டுக்கள் பிரபலமாகியுள்ளது. வைஷ்ணவி, அஞ்சன் இருவருமே நாய்களை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்கள் என்பது கூடுதல் தகவல்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout