'இது வெறும் டிரையல் தான் சார்' என கூறிய வனிதாவுக்கு பதிலடி கொடுத்த கமல்!

இது வெறும் டிரைலர் தான் என கமல்ஹாசனிடம் வனிதா கூறியதை அடுத்து கமல்ஹாசன் அதற்கு பதிலடி கொடுத்த வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஒரு வாரத்தில் வனிதா கிளப்பிய காப்பித்தூள் பிரச்சனை பெரும் பிரச்சனையாக வெடித்தது. தனக்கு காப்பித்தூள் வேண்டுமென்று பிக்பாஸிடம் வனிதா அடம்பிடித்தது, காப்பித்தூள் வந்தவுடன் அதை தனியே எடுத்து வைக்க முயற்சித்தது, அதை தட்டி கேட்ட அபிராமியை வெளுத்து வாங்கியது உள்பட இந்த வாரத்தின் பெரும்பகுதி காப்பித்தூள் பிரச்சனைகளிலேயே முடிந்துவிட்டது.

இந்த நிலையில் இது குறித்து கமல்ஹாசன் விசாரிக்கும் போது, ‘பிக் பாஸ் இதுவரை கொடுத்த பொருளை திருப்பி வாங்கியதாக இந்த சீசன்களில் எதிலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது என்று கூறுகிறார். பிக்பாஸ் வீட்டிற்கு வந்த டீ தூளை எடுத்து செல்லுங்கள் என்று வனிதா கூறியதை குறிக்கும் வகையில் கமல்ஹாசன் இதனை தெரிவித்தார்.

இதனை அடுத்து வனிதாவை தவிர வேறு யாராவது இந்த பிரச்சனையை கிளப்பி ரியாக்சன் எப்படி இருந்திருக்கும்? என கமல்ஹாசன் கேட்க அதற்கு சினேகன், ‘வனிதா மீது எல்லோருக்குமே ஒரு சின்ன பயம் உள்ளது என்று கூறினார். வனிதா ஆளுமையுடன் இருக்கிறார் என்ன சுரேஷ் கூறுகிறார். வனிதாவின் செயலை நான் தட்டிக் கேட்டிருக்க வேண்டும் என கேப்டன் ஷாரிக் கூறுகிறார்.

அப்போது கமல்ஹாசன், ‘வனிதா உங்கள் தைரியமும் புரட்சியும் எனக்கு பிடித்து இருக்கிறது. ஆனால் அதை பெரிய விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள் என கமல் கூற அப்போது வனிதா, ‘இது சும்மா டிரெய்லர் தான் சார் என்ன கூறியபோது, ‘அப்படி என்றால் நீங்கள் வார்ம்-அப் செய்கிறீர்களா? ஆனால் காபியை கையில் வைத்துக் கொண்டு வார்ம்-அப் செய்யக்கூடாது, சிந்திடும்’ என்று வனிதாவுக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுப்பதுடன் இந்த வீடியோ முடிவுக்கு வருகிறது.

More News

விஷ்ணு விஷாலின் 'எப்.ஐ.ஆர்' படத்தில் இணைந்த சிம்பு: மாஸ் அறிவிப்பு!

விஷ்ணு விஷால் நடித்த 'எப்.ஐ.ஆர்'  என்ற திரைப்படம் வரும் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ்

அதிதி ஷங்கரின் வேற லெவல் வீடியோ: இணையத்தில் வைரல்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகும் 'விருமன்' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பதும்

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 92.

தோனியின் 'அதர்வா' கிராபிக்ஸ் நாவலில் கனெக்சன் ஆன சிம்பு!

பிரபல கிரிக்கெட் வீரர் தல தோனி 'அதர்வா' என்ற கிராபிக்ஸ் நாவலில் தோன்றியுள்ளார் என்பதும் இந்த நாவலின் டீசர் வீடியோவை தோனி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ

பிக்பாஸ் அல்டிமேட்டில் எதிர்பாராத திருப்பம்: கண்டெண்ட் கிங் போட்டியாளர் எலிமினேஷன்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கண்டெண்ட் கிங் என்று வர்ணிக்கப்படும் போட்டியாளர் முதல் வாரமே எலிமினேஷன் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.