'இது வெறும் டிரையல் தான் சார்' என கூறிய வனிதாவுக்கு பதிலடி கொடுத்த கமல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இது வெறும் டிரைலர் தான் என கமல்ஹாசனிடம் வனிதா கூறியதை அடுத்து கமல்ஹாசன் அதற்கு பதிலடி கொடுத்த வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஒரு வாரத்தில் வனிதா கிளப்பிய காப்பித்தூள் பிரச்சனை பெரும் பிரச்சனையாக வெடித்தது. தனக்கு காப்பித்தூள் வேண்டுமென்று பிக்பாஸிடம் வனிதா அடம்பிடித்தது, காப்பித்தூள் வந்தவுடன் அதை தனியே எடுத்து வைக்க முயற்சித்தது, அதை தட்டி கேட்ட அபிராமியை வெளுத்து வாங்கியது உள்பட இந்த வாரத்தின் பெரும்பகுதி காப்பித்தூள் பிரச்சனைகளிலேயே முடிந்துவிட்டது.
இந்த நிலையில் இது குறித்து கமல்ஹாசன் விசாரிக்கும் போது, ‘பிக் பாஸ் இதுவரை கொடுத்த பொருளை திருப்பி வாங்கியதாக இந்த சீசன்களில் எதிலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது என்று கூறுகிறார். பிக்பாஸ் வீட்டிற்கு வந்த டீ தூளை எடுத்து செல்லுங்கள் என்று வனிதா கூறியதை குறிக்கும் வகையில் கமல்ஹாசன் இதனை தெரிவித்தார்.
இதனை அடுத்து வனிதாவை தவிர வேறு யாராவது இந்த பிரச்சனையை கிளப்பி ரியாக்சன் எப்படி இருந்திருக்கும்? என கமல்ஹாசன் கேட்க அதற்கு சினேகன், ‘வனிதா மீது எல்லோருக்குமே ஒரு சின்ன பயம் உள்ளது என்று கூறினார். வனிதா ஆளுமையுடன் இருக்கிறார் என்ன சுரேஷ் கூறுகிறார். வனிதாவின் செயலை நான் தட்டிக் கேட்டிருக்க வேண்டும் என கேப்டன் ஷாரிக் கூறுகிறார்.
அப்போது கமல்ஹாசன், ‘வனிதா உங்கள் தைரியமும் புரட்சியும் எனக்கு பிடித்து இருக்கிறது. ஆனால் அதை பெரிய விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள் என கமல் கூற அப்போது வனிதா, ‘இது சும்மா டிரெய்லர் தான் சார் என்ன கூறியபோது, ‘அப்படி என்றால் நீங்கள் வார்ம்-அப் செய்கிறீர்களா? ஆனால் காபியை கையில் வைத்துக் கொண்டு வார்ம்-அப் செய்யக்கூடாது, சிந்திடும்’ என்று வனிதாவுக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுப்பதுடன் இந்த வீடியோ முடிவுக்கு வருகிறது.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day7 #Promo2 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/5JA4iCuUPZ
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 6, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments