கேம் ஷோவில் அரசியல் கலந்தால் இப்படித்தான்.. பாலாஜியின் விமர்சனம் யாருக்கு?
- IndiaGlitz, [Monday,December 12 2022]
பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களையும் தாண்டி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமன் அவ்வப்போது அரசியல் பேசி வருகிறார். இதனை மறைமுகமாக குறிப்பிட்டுள்ள பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பாலாஜி ’ஒரு கேம் ஷோவில் அரசியல் கலந்தால் இப்படித்தான் பொதுமக்களுக்கு பிரச்சனையாக இருக்கும்’ என்று கூறி இருக்கிறார். அவரது இந்த ட்விட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலாஜி முருகதாஸ் தனது டுவிட்டரில் விக்ரமனை தான் மறைமுகமாக இப்படி பேசியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஷோவை நடத்தும் கமல்ஹாசனே அரசியல் கட்சியின் தலைவராக இருந்தாலும் அவர் எந்த காரணத்தை முன்னிட்டும் தனது கட்சியின் கொள்கை பற்றியோ தனது அரசியல் பிரவேசம் பற்றிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியது இல்லை.
ஆனால் விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது கட்சியின் கொள்கைகள் மற்றும் அரசியல் பேசி வருகிறார். இது மற்ற போட்டியாளர்களுக்கு பிரச்சினையாக இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில்கூட மணிகண்டன் விக்ரமனின் அரசியல் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி எழுப்பினார் என்பதும் இதனால் இருவருக்கும் காரசாரமான விவாதம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான் அரசியல்வாதி, அதனால் அரசியல் பேசுவேன் என்று கூறும் விக்ரமன் சில சமயங்களில் மற்ற போட்டியாளர்கள் அவரை அரசியல்வாதி என குறிப்பிடும்போது, அவ்வாறு சொல்லக் கூடாது என்றும் வாக்குவாதம் செய்து வருகிறார். எனவே ஆரம்பத்தில் விக்ரமனுக்கு இருந்த ஆதரவு தற்போது படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.