பிக்பாஸ் அல்டிமேட்: கடந்த வாரம் டபுள் எவிக்சன், இந்த வாரம் எத்தனை தெரியுமா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது என்பது தெரிந்ததே.

14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா, ஷாரிக், அபினய் ஆகிய நால்வர் குறைந்த ஓட்டுகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். நடிகை வனிதா தானாகவே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். இதனை அடுத்து தற்போது பிக்பாஸ் வீட்டில் 9 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வார கேப்டன் தாமரை மற்றும் ட்ரெண்டிங் பிளேயர் பாலாஜி ஆகிய இருவரை தவிர மற்ற ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். இவர்களிலிருந்து குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த வாரம் எவிக்ஷன் கிடையாது என கூறப்படுகிறது. கடந்த வாரம் டபுள் எவிக்சன் மற்றும் எதிர்பாராத வகையில் வனிதாவின் வெளியேற்றத்தை அடுத்தே இந்த வாரம் எவிக்சன் இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த வாரம் சிம்பு நிகழ்ச்சியை வழங்கவுள்ளார் என்பதும், இந்த வாரம் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.