இந்த கேமிலும் புரியாத மாதிரி நடிக்காதீங்க: தாமரையை வெளுத்து வாங்கிய சுரேஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த கேமிலும் புரியாத மாதிரி நடித்து மேலே போகலாம் என்று எதிர்பார்க்காதீர்கள் என தாமரையை சுரேஷ் சக்கரவர்த்தி வெளுத்து வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக ’போட்டியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள்’ என்ற டாஸ்க் தற்போது நடைபெற்று வருகிறது. ஒருவர் மேடை மீது ஏறி உட்கார்ந்து கொள்ள அவரிடம் பத்திரிக்கையாளர்கள் போல் இருக்கும் மற்ற போட்டியாளர்களை கேள்வி எழுப்ப வேண்டும். அந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட நபர் பதில் சொல்ல வேண்டும் என்பதுதான் இந்த டாஸ்க்
இந்த டாஸ்க் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த டாஸ்க்கில் சுரேஷ் சக்கரவர்த்தி பதிலளிக்கும் இடத்தில் உட்கார்ந்து இருக்க, அவரிடம் தாமரை, ‘நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்று சொல்லி இருக்கின்றார்கள். அப்படி நீங்கள் பண்ணியது என்ன நன்மையில் முடிந்துள்ளது? என்று கேள்வி எழுப்பினார்
அதற்கு பதில் கூறிய சுரேஷ் சக்கரவர்த்தி, நான் நாரதர் இல்லை என்பதை தான் நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நான் மட்டுமல்ல கமல் சார் அவர்களே கலகம் பண்ணுமவது நான் இல்லை என்று சொல்லி இருக்கிறார். இந்த கேமிலும் புரியாத மாதிரி நடித்து மேலே போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் கேட்கும் கேள்வியை கவனமாக கேட்க வேண்டும். நான் கலகம் பண்ணவில்லை என்று நான் சொன்னதை நன்றாக காதில் கேட்டு விட்டு, புரியாத மாதிரி நடித்து ஜெயித்து விடலாம் என்று நீங்கள் நினைப்பதை நான் கண்டிக்கின்றேன்’ என தாமரையை சுரேஷ் சக்கரவர்த்தி வெளுத்து வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் கடைசி வரை தனக்கு கேம் புரியவில்லை என தாமரை கூறியதை பிரியங்கா உள்பட ஒருசில போட்டியாளர்கள் விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day4 #Promo1 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/P9I6LK7gZC
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 3, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout