பிக்பாஸ் அல்டிமேட்: அடுத்த வார தலைவர் போட்டிக்கு சுரேஷூடன் மோதும் மூவர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இதற்கு காரணம் ஐந்து சீசன்களிலும் பிரபலமான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் வார கேப்டனாக ஷாரிக் இருந்த நிலையில் தற்போது அடுத்தவார கேப்டனாக தேர்வு செய்யப்படுவதற்கு டாஸ்க் வைக்கப்படுகிறது.
அனிதா, அபிராமி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகிய 4 பேர் தலைவர் தேர்தலுக்கு போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு போட்டியாளர்களின் பக்கத்திலும் தலைவர் தேர்தலுக்கு போட்டியிடுபவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தலைவர் தேர்தலில் போட்டியிடாத மற்ற போட்டியாளர்கள் தலைவராக இருக்க தகுதியில்லாதவர்கள் எனக் கருதப்படும் இரண்டு பேர்களின் புகைப்படங்களை உடைக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார்.
இதனை அடுத்து போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் தலைவராக இருக்க தகுதி இல்லாதவர்களின் புகைப்படங்களை உடைத்து வரும் நிலையில் இந்த புரமோ வீடியோவில் இருந்து சுரேஷ், அனிதா ஆகிய இருவரில் ஒருவர் தலைவராக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day5 #Promo1 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/DEYNbF1X10
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 4, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com