திடீரென நிறுத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் லைவ்: என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்புடன் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக திடீரென பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
24 மணி நேரமும் லைவ் ஸ்ட்ரீமிங் என்றாலும் ஒருநாள் கழித்தே ஒளிபரப்பாகி வரும் நிலையில் திடீரென தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதா? அல்லது பிக்பாஸ் வீட்டில் ஏதாவது சண்டை சச்சரவு நடந்து அதன் காரணமாக நிறுத்தப்பட்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
சற்றுமுன்னர் பிக்பாஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் புரோமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில் ’புரோமோ விடியோ இருக்கட்டும் பிக் பாஸ் லைவ் நிகழ்ச்சியை ஏன் நிறுத்தினீர்கள்? என கமெண்ட்ஸ் பகுதியில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருந்தாலும் பல மணி நேரங்களாக ஏன் அது சரி செய்யவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
நாளை கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கும் நிலையில் இன்று திடீரென இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளதாகவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதற்கு பிக்பாஸ் அல்டிமேட் குழுவினர் என்ன விளக்கம் அளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout