தோத்துப்போன வெறுப்போட, திரும்ப வர்றான் நெருப்போட: பிக்பாஸ் அல்டிமேட் முதல் போட்டியாளர் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,January 24 2022]

'தோத்துப்போன வெறுப்போட, திரும்ப வர்றான் நெருப்போட’ என பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் விரைவில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் டிஸ்னி ஓடிடியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியில் 13 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பை டிஸ்னி ஹாட்ஸ்டார் தனது டுவிட்டர் பக்கத்தில் தினந்தோறும் வெளியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில் சற்றுமுன் முதல் போட்டியாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. அவர்தான் கவிஞர் சினேகன்.

இதுகுறித்த வீடியோவில் சினேகன், ‘தோற்றுப்போன வெறுப்போட, திரும்ப வர்றான் நெருப்போட’ என்ற கவிதையுடன் அறிமுகம் ஆவதும் பிக்பாஸ் அவரை வரவேற்பதுமான காட்சிகள் உள்ளன.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகன் நூலிழையில் டைட்டில் பட்டத்தை மிஸ் செய்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டில் வின்னர் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.