பிக்பாஸ் அல்டிமேட்: இருவரும் முன்னாள் காதலர்களா? மாறி மாறி நாமினேஷன் செய்ததால் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இரண்டு போட்டியாளர்கள் முன்னாள் காதலர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி இருவருமே மாறி மாறி ஒருவரை ஒருவர் நாமினேஷன் செய்து கொண்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நிரூப் என்பதும் இவரது முன்னாள் காதலி யாஷிகா என்பதும் அதன் பின் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்து விட்டனர் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தான் வருவதற்கு காரணமே யாஷிகா என்றும் நிரூப் பெருமையுடன் கூறியிருந்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நிரூப்பின் இன்னொரு காதலி அபிராமி வெங்கடாச்சலம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. நேற்றைய நாமினேஷன் படலத்தின் போது அபிராமியை தனக்கு முன்பே தெரியும் என்றும் அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் என்றும் கூறிய நிரூப், ‘அப்போது பார்த்த அபிராமி தற்போது இல்லை என்றும் அவர் கூறினார்.
அதேபோல் அபிராமி, நிரூப்பை நாமினேஷன் செய்து அவர் ஒரு கடினமான போட்டியாளர் என்பதால் நாமினேஷன் செய்கிறேன் என்று கூறினார். ஆனால் நிரூப் தனது முன்னாள் காதலர் என்பதை அபிராமி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Niroop opened about his relationship with #Abhirmai inside Bigg Boss house . . "She is completely different from what I seen in the past" he says as his reason to nominate her !! pic.twitter.com/l6N25H7br9
— Anbu (@Mysteri13472103) February 1, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com