மீண்டும் அவமதிக்கப்பட்டேன்: சுரேஷ் தாத்தாவின் வருத்தமான பதிவு!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் திங்கள் முதல் எவிக்ட் ஆன போட்டியாளர்கள் ரீஎன்ட்ரி ஆகி கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஷிவானி மட்டுமே உள்ளே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளில் இருந்தே சுரேஷ் தாத்தா உள்ளே வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் ’தனக்கு அழைப்பு வரவில்லை’ என்றும் ’அழைப்பு வந்தால் கண்டிப்பாக செல்வேன்’ என்றும் சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறிவந்தார்.

இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் நல்ல அறிகுறி தெரிகிறது என்றும் கூறிய சுரேஷ், இன்று காலை, ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்னமோ நடக்குது’ என்ற பாடலை பதிவு செய்து மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மீண்டும் அவமதிக்கப்பட்டேன்’ என்று பதிவு செய்திருப்பதை அடுத்து அவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

கடந்த சீசனிலும் ஒரு சிலரை ஒதுக்கி வைத்தது போல் இந்த சீசனில் சுரேஷை பிக்பாஸ் குழுவினர் ஒதுக்கி வைத்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஒதுக்கி வைக்கும் அளவுக்கு சுரேஷ் எந்த தவறையும் செய்யவில்லையே என்றும் அவரது ஆர்மியினர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது குறித்து சுரேஷ் சக்ரவர்த்தி மேலும் என்ன சொல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

100 நாளை கடந்துட்டேன், இதெல்லம் எனக்கு சாதாரணம்: ஆரியின் மாஸ் வசனம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே பார்வையாளர்களை கவர்ந்த 'நாடா காடா' என்ற டாஸ்க் இன்று மீண்டும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு வைக்கப்பட்டு உள்ளது என்பது இன்றைய இரண்டாவது புரமோவில்

துக்ளக் தர்பார் பிரச்சனை: சீமானை சமாதானம் செய்ய பார்த்திபன் செய்த முயற்சி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் நடித்த 'துக்ளக் தர்பார்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான போது அதில் பார்த்திபனின் அரசியல்வாதி கேரக்டர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

ரசம் சாப்பிட்டால் கொரோனா போய்டும்… தமிழக அமைச்சரின் புது விளக்கம்!!!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளுக்கு உணவில் ரசத்தை சேர்த்து கொடுத்ததினால் இந்தியர் ஒருவர் பெரிதும் பாராட்டப் பெற்றார்.

'பத்து தல' படத்தில் இணைந்த மூன்றாவது ஹீரோ!

சிம்புவின் 'ஈஸ்வரன்' திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் 'பத்து தல' என்றும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'முஃப்தி' என்ற படத்தின்

கணவனுக்கு நாயைப்போல சங்கிலி மாட்டி நடுரோட்டில் வாக்கிங் சென்ற பெண்… வைரல் வீடியோ!!!

கொரோனா நேரத்தில் விசித்திரத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அப்படி ஒரு சம்பவம் கனடாவில் நடைபெற்று இருக்கிறது